Learn how to KISS !
முதலிணைப்புச் சொல்லில்* 'முத்தம்'
emphasis என்னும் தொழிலியல் மொழி பயிற்றும் குழுமம்(business - writing training Company)
அறிவியலாய்வு நடைக்கு உச்சக் குறிப்புகள் பத்தினை வரிசைப்படுத்திக் கூறுகிறது. அவற்றுள் ஒன்றுதான் Learn how to KISS.
மொழி நடையில் முத்தமா !
உயிர், மெய் எழுத்துகளைத் தனித்தனியே எழுதும் மரபுடைய ஆங்கிலம் போன்ற மொழிகளில் முதலிணைப்புச் சொல்(acronym)லாக்கம் எளிது; உயிர்மெய்யெழுத்துகள் கொண்ட தமிழ் போன்ற மொழிகளில் அரிது.
இராமலிங்க அடிகளாரின் பதவி (பசித்திரு, தனித்திரு, விழித்திரு) என்னும் அருளுரை தமிழின் அரிதான , இயல்பான, முதலிணைப்புச் சொல்.
Keep it Short and Simple! = KISS
___________________________________
* 'யாப்பருங்கலக் காரிகை'யின் கட்டளைக் கலித்துறைப் பாவாலாகிய காரிகை ஒவ்வொன்றன் முதற் சொல்லையும் தொகுத்து ஒரு காரிகையாக்கியிருப்பார் அமித சாகரர் .
மனப்பாடக் கல்விக் காலத்தில் முதனினைப்புக் காரிகை (முதல் நினைப்புக் காரிகை) மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும். இக்காலத்தும் இதன் பயனை நானே பட்டறிந்திருக்கிறேன்.
முதனினைப்பு என்பதையொத்தது முதலிணைப்பு .
Kiss என்பதற்கு பிறிதொரு பொருளை 30 ஆண்டுகளுக்கு முன் டெபோனிர் ஆங்கில இதழில் படித்தேன். நேரில் பார்க்கும்போது உங்களிடம் கூறுவேன்.
ReplyDelete